யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 03 படுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த இடத்தினை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
அதன் போது , மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக கட்டப்பட்டிருந்த நிலையிலும் , ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
அத்துடன் அங்கிருந்த 43 வயதான நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

