Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

PQ-வின் புதிய தேர்தல் வியூகம் – ஆங்கில வாக்காளர்களை நோக்கி பிளமோண்டனின் பகிரங்கக் கடிதம்!

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு, தனிநாடு கோரும் பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் போல் சென்-பியர் பிளமோண்டன் (Paul St-Pierre Plamondon), அம்மாநிலத்தில் வாழும் ஆங்கில மொழிபேசும் Anglophones வாக்காளர்களைக் கவரும் வகையில் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிபேசும் மக்கள் இருசாராரும் ஒரே மாதிரியான வாழ்வாதாரச் சவால்களையே எதிர்கொள்கின்றனர் என்று அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேஷனல் போஸ்ட் (National Post) நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கடிதத்தில், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் பேசும் கியூபெக்வாசிகளின்
அக்கறைகளும் கவலைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்ற தவறான நம்பிக்கையை, பொது விவாதங்கள் தேவையின்றி ஊக்குவித்து
வந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வாழ்க்கைச் செலவு உயர்வு, சொந்தமாக வீடு வாங்குவதில் உள்ள சிரமங்கள், சுகாதாரம் மற்றும் கல்வியமைப்பில் நிலவும் நெருக்கடிகள்போன்றவை இரு சமூகத்தினரையும் சமமாகப் பாதிப்பதாகப் பிளமோண்டன் குறிப்பிட்டுள்ளார்.அதேசமயம், கியூபெக்கில் அவரது கட்சி ஆட்சி அமைத்தால் ”கியூபெக் தனிநாடு” தொடர்பாகப் புதிய பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படும் என்ற தமது கட்சியின் முக்கிய வாக்குறுதியை இந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

மாறாக, கியூபெக்கிற்கு ஒரு திறமையான, நேர்மையான மற்றும் மக்களுக்குப் பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை வழங்குவதே தேர்தலின் முதன்மை வினாவாக இருக்கும் என்று பிளமோண்டன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நாங்கள் கட்டியெழுப்பும் சுதந்திர கியூபெக் நாட்டில், வரலாற்றுச்சிறப்புமிக்க ஆங்கில மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள கியூபெக் மாகாண சபைத்தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அண்மைய
கருத்துக்கணிப்புகளில் ஆளும் கூட்டணி அவெனீர் கியூபெக் (CAQ) மற்றும் கியூபெக் லிபரல் கட்சி' (PLQ) ஆகியவற்றை விட பார்ட்டி கியூபெக்வா கட்சி முன்னணி வகித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு
அடுத்த செய்தி கியூபெக்கில் கோர விபத்து – லொறியுடன் கார் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நடைபாதை வழித்தடங்கள்

ஜூன் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

தென்கிழக்காசிய நாடுகளுக்கு பயணமாகின்றார் பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
கியூபெக்முதன்மை செய்தி

முழுமையாக மின்சார மயமாகும் எயார் கனடா ….

ஏப்ரல் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?