Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் கைது

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில், பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த அங்காடியில் அவர் பணிபுரிந்த காலத்தில், இளம் பெண்கள் மற்றும் பதின்ம வயதினர் உடை மாற்றும் அறையில்  இரகசியக்  கேமராக்களைப்  பொருத்தி  ஆபாசமாகப் படம்பிடித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட அந்தப் பல்பொருள் அங்காடியின் ஊழியர் ஒருவர், உடை மாற்றும் அறையில் இருந்த சிறிய துளை ஒன்றின் வழியாக மின்கலத்தினால் இயங்கும் இரகசியக் கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக இது குறித்து நிர்வாகத்திடமும், பின்னர் மொன்றியல் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் அந்த மேலாளரின் அறையிலிருந்து பல இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில், ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் படம்பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சேமித்து  வைக்கப்பட்டிருந்தமை  விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொன்றியல் பொலிஸார் (SPVM) இந்த விவகாரம் குறித்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், 34 வயதான அந்த முன்னாள் முகாமையாளர் மீது சட்டவிரோதமாகப் படம்பிடித்தல் (Voyeurism) மற்றும் அந்தரங்கத்தைப் பாதிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மொன்றியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம்
அடுத்த செய்தி லூசியானோ பிரட்டோலின் குற்றவாளி என தீர்ப்பளித்த நியூயோர்க் மாநில நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி….

பிப்ரவரி 14, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய கழிவுநீர் பாரவூர்தி!

செப்டம்பர் 3, 2025
இலங்கைமுதன்மை செய்தி

மின் கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் – சஜித்

பிப்ரவரி 25, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?