Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் கண்டெடுக்கப்பட்ட மர்மக் கொள்கலனில் கிருமி இல்லை: காவல்துறை உறுதி!

நவம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் நதிப் பகுதியில் அமைந்துள்ள ஆளில்லா தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதும் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான மர்மக் கொள்கலனில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தீவிர ஆந்தராக்ஸ் (Anthrax) கிருமி எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணக் காவல்துறை (Sûreté du Québec) இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் திகதியன்று கியூபெக் நகருக்கு வடகிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல் ஓ கான் கார்ட் (Île aux Canards) தீவில் இந்த உலோகக் கொள்கலன் கண்டெடுக்கப்பட்டது.

அதனை மீட்கும் பணியில் கியூபெக் மாகாணக் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

எவ்வித ஆபத்துகளும் நேராமல் இருக்க வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், அபாயகரமான பொருட்கள் கையாளும் பிரிவு (hazmat team) மற்றும் உலங்குவானூர்தி ஆகியவை வரவழைக்கப்பட்டு, இந்தக் கொள்கலன் மீது தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கொள்கலனில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சபீல்ட் (Suffield) இராணுவத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சாம்பல்-பச்சை நிறத்திலான அந்த உலோகக் கொள்கலனின் மீது “Property Air Force U.S. Army” எனப் பொறிக்கப்பட்டுள்ளதுடன், அது 1942ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பதற்கான அடையாளமும் காணப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்கொள்கலனில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத திரவப் பொருள் மட்டுமே உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், அந்தத் திரவம் என்னவென்பது குறித்தோ அல்லது அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்தோ காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பீப்பாய்!
அடுத்த செய்தி கனடிய குற்றவாளியின் கூட்டாளியை விடுவிக்க லஞ்சம் பெற்ற மெக்சிகோ நீதிபதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் இதுவரை 29.79% வாக்குகள் பதிவு!

அக்டோபர் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

எல்ல – வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிதி!

செப்டம்பர் 5, 2025
கியூபெக்

வெர்டன் மருத்துவமனைக்கு எதிராக 50,000 டொலர் இழப்பீடு கோரி வழக்கு!

அக்டோபர் 19, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

கோஹ்லி இன்ஸ்டா பதிவு

ஜூன் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?