Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விசாரணை என்ற பெயரில் பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்குத் தெளிவான தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு முறையான சம்மன் அனுப்பப்பட வேண்டும் என்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர், விசாரணை என்ற பெயரில் காவல்துறை தங்களைத் துன்புறுத்துவதைத் தடுக்கக் கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்துத் தெளிவுபடுத்திய நீதிமன்றம், விசாரணை நடத்தப்படும் விவரங்கள் மற்றும் அழைப்பாணை தொடர்பான தகவல்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் உத்தியோகபூர்வப் பதிவேட்டில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சம்மன் அனுப்பாமல் அல்லது முறையான ஆவணப் பதிவுகள் இன்றி எந்தவொரு தனிநபரையும் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கவோ அச்சுறுத்தவோ கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.

வழக்கின் விசாரணையின் போது கருத்தைத் தெரிவித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “காவல்துறையினரின் சட்டப்பூர்வமான விசாரணையில் வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை. அதேவேளையில், விசாரணை என்ற போர்வையில் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்களைப் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்காது” என்று எச்சரித்தார்.

காவல்துறையினரின் விசாரணைத் துன்புறுத்தல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் காவல்துறையின் அதிகார மீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த வழிகாட்டுதல்களை அனைத்துக் காவல் நிலையங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி 109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்
அடுத்த செய்தி தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி

மே 9, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணமாக்கவுள்ளார்

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழ்நாடு தேர்தலுக்காக விஜய் போடும் பிரம்மாண்ட திட்டம்..!!

மார்ச் 27, 2025
இந்தியா

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

ஏப்ரல் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?