தமிழ்நாடு மாநிலத்துக்கான பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்போர், 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போதைய தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முதலானோர் குறித்த தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கவே இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.


