2019ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு ஒன்று இன்று (31) அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
கடமை தவறியமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் கிடைத்த புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது.


