யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத போது , வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து , அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரண விசாரணையின் போது குறித்த இளைஞன் சில காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.

