Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் – செபமாலை அந்தோணி சிவராசா

ஜூலை 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு, மற்றும் புங்குடுதீவு கடற்தொழிலாளர்களின் வலைகளை அறுத்து நாசமாகியுள்ளனர்.

இதனால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளமையால், எமது தொழிலாளர்கள் பல இலட்சம் நஷ்டமடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அந்த வலைகளை வேண்டி தொழில் செய்வதற்கு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

வலைகளை இழந்த தொழிலாளிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்க கூட எவரும் இல்லை. யாரை குறை சொல்வது யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாத நிலையில், அநாதரவாக தொழிலாளிகள் நிற்கின்றனர்.

எங்கள் நாட்டு அரசாங்கத்திடம் கடற்தொழில் அமைச்சர் ஊடாக தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி வருகிறோம். கடற்படையினர் முழுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதேநேரம், தமிழக முதலமைச்சர் விஜயிடமும் தயவான வேண்டுகோளை முன் வைக்கிறோம். காரைக்கால், புதுக்கோட்டை , இராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளர்களை எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்துங்கள். அவர்களால் எங்கள் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகிறது.

தொப்புள் கொடி உறவுகள் என கூறிக்கொள்ளும் இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சனைகள், முரண்பாடுகள் வராது தடுத்து நிறுத்துங்கள்

இரு நாட்டு அரசாங்கமும் மீனவர் பிரச்சனையை பேசி தீர்வினை பெற வேண்டும். தமிழக அரசும் , இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு தொடர்பான  அறிவிப்புக்குக் கனடா கண்டனம்
அடுத்த செய்தி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டியின் திகதிகள் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

11 வயது சிறுவனை வளர்ப்பு நாயை வைத்து கடிக்க வைத்து ரசித்த நபர் கைது!

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

Breaking – ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பா.உ.அருச்சுனாவிற்கு எதிராக சான்றுரைத்த வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்

மார்ச் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

மே 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?