வடமாகாணத்தில் 2025ம் ஆண்டு வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டமைக்காக 2 கோடியே 48 இலட்சத்து 40 ஆயிரத்து ஐந்நூறு ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.
குறிப்பாக வடமாகாணத்தில் 3174 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3062 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டே குறித்த தண்டம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 619 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் 617 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 66 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் 818 சுற்றிவழைப்புக்களும் 801 வழக்கு பதிவு செயயப்பட்டு 77 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 608 சுற்றிவழைப்புக்களும் 633 வழக்கு பதிவு செயயப்பட்டு 49 இலட்சத்து 89 ஆயிரத்து ஐந்நூறு ரூபாவும் தண்டப்பணமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 591 சுற்றிவழைப்புக்களும் 532 வழக்கு பதிவு செயயப்பட்டு 31 இலட்சத்து 62 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் 538 சுற்றிவழைப்புக்களும் 479 வழக்கு பதிவு செயயப்பட்டு 22 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கீரி சம்பா உட்பட அரிசி விற்பனை தொடர்பான வடமாகாணத்தில் விசேட சுற்றுவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
