Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது பிடியாணை நிலுவையிலுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரச விமானம், கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு, அனுமதி கோரியிருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த விமானப் பயணம் தொடர்பில், கனடா அரசாங்கத்திடம் தான் உத்தியோகபூர்வ அனுமதி கோரியிருந்ததாக இஸ்ரேல் தற்போது அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திப்பதற்கும், மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லின்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கும் நெதன்யாகு, அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டன் நோக்கிப் பயணித்தபோதே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், கனேடிய வான்பரப்பில் நுழைய இஸ்ரேலிய பிரதமரின் விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதா அல்லது அவர் எவ்வாறு கனடிய வான்பரப்பில் நுழைந்து வெளியேறினார் என்பது குறித்து, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கக் கனடிய அதிகாரிகள் மீண்டும் மறுத்துவிட்டதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய அரசிற்குச் சொந்தமான ‘விங் ஆஃப் சீயோன்’ (Wing of Zion) என்ற போயிங் 767 ரக விமானத்தில் பயணித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடாவின் ‘நியூஃபவுண்ட்லேண்ட்’ மற்றும் ‘நோவா ஸ்கோஷியா’ ஆகிய மாகாணங்களின் வான்பரப்பைக் கடந்தே அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.

காசாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காகப் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி அன்று கைது பிடியாணை பிறப்பித்திருந்தது.

கனடா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சாசனத்தில் (Rome Statute) கையெழுத்திட்டுள்ள ஒரு நாடு என்ற வகையில், நெதன்யாகு கனடாவிற்கு வருகை தந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று தற்போதைய தற்போதைய பிரதமர் மார்க் காரினியும் (Mark Carney), முன்னைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் விமானத்திற்கு, கனேடிய வான்பரப்பைப் பயன்படுத்த மறைமுக அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெதன்யாகுவின் விமானம் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அன்று புளோரிடாவுக்கும், கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அன்று அமெரிக்காவின் மற்றொரு மாநிலத்திற்கும் பயணித்தபோது கனடிய வான்பரப்பைப் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு
அடுத்த செய்தி யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கனடா

டொராண்டோ மாநகர சபை நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்த தீர்மானம்

டிசம்பர் 18, 2025
கனடா

மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம்

ஏப்ரல் 3, 2026
கனடா

கனடாவில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்

டிசம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?