Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

ஜூலை 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

செயலமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றான வெப்பத் தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் மத்திய பசுபிக் பிராந்தியக் கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது உருவாக்கும்.

மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.

அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.

“எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டு கொண்டார்.

இவ் நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்தி யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி
அடுத்த செய்தி யாழில் சிறுமியை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு: பிரான்ஸில் தலைமறைவானவருக்கு 30 ஆண்டு சிறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆயிரத்தை நெருங்கிய தேர்தல் விதி மீறல்கள் ….

ஏப்ரல் 10, 2025
1
அண்மைய செய்திகள்கியூபெக்

500 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் கியூபெக் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் பதவி விலகல்..!!

பிப்ரவரி 28, 2025
இலங்கை

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழந்த சம்பவம் -கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!

ஆகஸ்ட் 26, 2025
இலங்கை

யாழில்.13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது.

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?