கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டம் பறக்கவிடாதீர்கள் என பொதுமக்களிடம் விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
விமான பயணிகளின் உயிருக்கும் இது ஆபத்தாக இருக்கலாம். எனவே இந்த அறிவுறுத்தலை புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் பறக்கவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


