நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில் ஹட்டன் – பொகவந்தலாவ வீதியின் நோர்வூட் பகுதியில் இன்று காலை வாகன விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பாடசாலை மாணவர்களோடு சென்ற தனியார் பேருந்தும் எதிர்திசையில் வந்த பாரவூர்தியும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரை பயணித்துள்ளனர். இந்த விபத்தில் மாணவன் ஒருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணை மேற்க் கொண்டதில், வீதிகள் வலுக்கும் தன்மையோடு காணப்படுவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காலநிலையை கருத்திற் கொண்டு பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
