நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு தெஹியோவிட்ட கல்வி வலய பாடசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் ருவன்வெல்ல பகுதியிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கும், தெஹியோவிட்ட பகுதியிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கும் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள ஏனைய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் தீர்மானிக்க வேண்டும் என கல்வி வலய பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
