நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல ஆகிய பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எகலியகொட போன்ற பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் மீரிகம, திவுலபிட்டிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, பாதுக்க, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரிஎல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, புளத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
