இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, 82 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றது.
ஒரு வாரத்துக்கும் மேலாக ஜாவா மாகாணத்தில் கனமழை உட்பட தீவிர வானிலை நிலவுவதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
