Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

ஜூலை 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் / எரிவாயுக் குழாய்த்திட்டங்கள் உள்ளிட்ட பெரு அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் வள அபிவிருத்தித் திட்டங்களுக்கான சுற்றாடல் மதிப்பீட்டுச் செயல்முறையை (Environmental Assessment) எளிமையாக்கவும் விரைவுபடுத்தவும் கியூபெக் மாகாண  அரசாங்கமும் நாட்டின் மத்திய அரசாங்கமும் கொள்கையளவில் உடன்பாடு கண்டுள்ளன.

மொன்றியலில் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கியூபெக் மாகாண சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரி (Pascale Déry) மற்றும் மத்திய அரசுத் திணைக்களங்களின் மறுசீரமைப்பு மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் ஜோயல் லைட்பவுண்ட் (Joël Lightbound) ஆகியோர், இணைந்து இப்புதிய ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

இப் புதிய உடன்படிக்கையின்படி, கியூபெக் மாகாண அதிகார வரம்பிற்குள் அமையும் பெருந்திட்டங்கள், மாகாண அரசாங்கத்தின் சூழல் மதிப்பீட்டுக்கு மட்டுமே உட்படுத்தப்படும்.

இதன்மூலம் மத்திய அரசு மற்றும் மாகாண அரசு என இருவேறாக மேற்கொள்ளப்பட்டு வந்த இரட்டைச் சூழல் மதிப்பீட்டு நடைமுறைகள் தவிர்க்கப்பட்டு, திட்டங்களை விரைவாகத் தொடங்க வழிவகுக்கப்படும்.

சூழல் மதிப்பீட்டுச் செயல்முறை விரைவுபடுத்தப்பட்டாலும், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான உயர் தரநிலைகளில் எந்தவொரு விட்டுக் கொடுப்பும் செய்யப்பட மாட்டாது என்று, கியூபெக் சூழல் அமைச்சர் பாஸ்கல் டெரி சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்
அடுத்த செய்தி மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொண்ட்ரியல் ‘நோட்ரே-டேம்-டி-கிரேஸ்’ மாணவர்களுக்கான புதிய திட்டம் ஆரம்பம்

பிப்ரவரி 23, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கன்சர்வேடிவ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு, கியூபெக் மாகாணத்தில் கடுமையான எதிர்ப்பு!

ஏப்ரல் 22, 2025
கியூபெக்

லாக்-மெகாந்திக் நகரில் சரக்கு ரயில்களுக்கான புறவழிப்பாதை திட்டத்திற்கு அனுமதி

ஜூலை 17, 2026
கியூபெக்

மொன்றியலில் ‘வசந்தகாலத் தூய்மைப் பணி’ ஆரம்பம்

மார்ச் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?