Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

ஜூன் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை எக்காரணம் கொண்டும் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு வந்தது.

இன்றைய நீதிமன்ற அமர்வில் , மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரைக் கைது செய்வதற்குப் பின்னணியில் உள்ள சட்ட முரணான தன்மைகள் குறித்துத் தொடர்ந்து தனது பலத்த வாதங்களை முன்வைத்தார்.

இம் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அரசுத் தரப்பு அதிகாரிகள் சார்பாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விசேட ரிட் மனுவில்,பொலிஸ் மா அதிபர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் , முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன,சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், அரசியல் பழிவாங்கல்கள் அல்லது முறையற்ற சட்ட நடவடிக்கைகளின் கீழ் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தடையுத்தரவு கோரும் மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் மேலதிக வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.

முந்தைய செய்தி சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கம் அதிகார துஷ்பிரயோகம் என நாமல் தெரிவிப்பு
அடுத்த செய்தி தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி – அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

49வது தேசிய விளையாட்டு விழாவில் மூன்றாம் இடத்தினை பெற்ற வடமாகாண அணி வீரர்கள்

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய எம்.ஏ சுமந்திரன்

செப்டம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பூமியை விட 5 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

மார்ச் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?