Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா இடம்பெற்றது!

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனும், சிறப்பு விருந்தினர்களாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் லாகினி நிரூபராஷ் , மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கெளரவ விருந்தினர்களாக மூத்த கலைஞர்களான திரு.வெ. முத்துச்சாமி மற்றும் திரு.மு. ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

கலாபூஷணம் இளையமுத்து துரைமுத்து அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலக முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் உடுக்கி இசை (வடமராட்சி வடக்கு வாழ் கஞைர்கள்), வரவேற்பு நடனம் (தொண்டைமானாறு அபிநயசுரபி நடன மன்றம்), கீர்த்தனை (ஞான சம்பந்தர் மன்றம்), காளிங்க நர்த்தனம் (பரத சிவாலய கலைமன்றம்), வில்லிசை (வள்ளி திருமணம்-வேணுகான சபாமன்றம்) நாடகம் (நட்பின் பரிசு வெ. முத்தச்சாமி குழுவினர்), பாரதியின் நடனம் (பரதசுரபி கலாமன்றம) என்பன சிறப்பாக நடைபெற்றது.

கலைஞர்களுக்கான ” கலைப்பரிதி” “இளங் கலைஞர்” “இளங் கலைப்பரிதி”விருதுகள் மாவட்ட செயலரால் வழங்கப்பட்டதுடன், தேசிய கலை இலக்கியப் போட்டிகளின் பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டிறைச்சியுடன் மூவர் கைது!
அடுத்த செய்தி நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

ஜனவரி 12, 2026
1
இலங்கை

மன்னார் குடும்பஸ்தரை காணவில்லை – மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

மார்ச் 27, 2025
இலங்கை

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை

ஜனவரி 10, 2026
இலங்கை

நீர் கட்டணம் குறைக்கப்படுமா….?

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?