கியூபெக்கில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தங்களது கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகக் கல்விக்கட்டண உயர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று, கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
ஆங்கில வழிப் பாடசாலைச் சபைகள் (English School Boards) கலைக்கப்படாமல் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அடக்குமுறை சார்ந்த சட்டங்களால் பிரெஞ்சு மொழியை வளர்க்க முடியாது என்று அவர் விமர்சித்துள்ளார்.
கியூபெக்கில் பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், ஆங்கிலேயர்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய மாற்று மொழிக் கொள்கைத் திட்டத்தை, சார்ள்ஸ் மில்லியார்ட் வெளியிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரெஞ்சு மொழியை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் கூடுதலாக 380 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய லிபரல் கட்சி திட்டமிட்டுள்ளது.


