மொன்றியல் நகரில் உள்ள ‘ரோஸ்மொண்ட்-லா பெற்றிட்-பத்ரி’ (Rosemont-La Petite-Patrie) பிராந்தியத்தில் நள்ளிரவில் இடம்பெற்ற வீதிவிபத்து குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நள்ளிரவு வேளையில் வீதியைக் கடக்க முயன்ற 60 வயது முதியவர் ஒருவர் மீது, கார் மோதியதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொன்றியல் நகரின் பாபினோ அவென்யூ (Papineau Avenue) மற்றும் சென்ட்-ஸோடிக் கிழக்குத் தெரு (St-Zotique Street East) சந்திப்புப் பகுதிக்கு அருகிலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தற்போது அந்த முதியவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாக (Out of danger) மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான கார் பாபினோ அவென்யூவில் தெற்கு நோக்கி (Travelling southbound) பயணித்துக் கொண்டிருந்த போதே, வீதியைக் கடக்க முயன்ற முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
