Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

மே 1, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

புதுமடம் கடற்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் .13 லட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் நேற்று (30) மீட்டுள்ளனர்.

பூச்சி மருந்து, ஷாம்பு, காபி தூள், ஃபேஸ் க்ரீம், சோப்பு, உள்ளிட்ட பொருட்களை மீட்ட எஸ் பி தனிப்பிரிவு போலீசார் பொருட்களை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் கடல் வழியாக படகில் கடத்தல் பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தமையினால் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததால் கடத்தல் சம்பவங்கள் குறைந்து இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கட்டதால் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் உச்சப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி சாலையில் உள்ள வீடு ஒன்றில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமேஸ்வரம் உட்கோட்ட எஸ் பி தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆளில்லாத அந்த வீட்டை சுற்றி வளைத்து தனிப்பிரிவு போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு 28 மூட்டைகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது 19 மூட்டைகளில் பூச்சி கொல்லி மருந்து, இரண்டு மூட்டைகளில் சோப்பு, ஐந்து மூட்டைகளில் ஃபேஸ் க்ரீம், ஒரு மூட்டையில் ஷாம்பு, ஒரு மூட்டையில் காபித்தூள் என மொத்தமாக 13 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த தனி பிரிவு போலீசார் மேலதிக விசாரணைக்காக அதை கீழக்கரை சுங்கதுறை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் ஒப்படைக்கப்பட்டு பின் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் புதுமடம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி எமது நிலம் எமக்கு வேண்டும்” – தொழிலாளர் தினத்தில் கறுப்பாடை அணிந்து முத்துநகர் விவசாயிகள் போராட்டம்.
அடுத்த செய்தி கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் பதிவாகியுள்ள தனியுரிமை மீறல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

நவம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு முதலாவது T20 போட்டி இன்று ஆரம்பம்

ஜூன் 13, 2025
இலங்கை

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

டிசம்பர் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கம் மக்களிடம் அதிகம் பொய் கூறுகிறது – நா.உ.நாமல் ராஜபக்ச

மார்ச் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?