Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எமது நிலம் எமக்கு வேண்டும்” – தொழிலாளர் தினத்தில் கறுப்பாடை அணிந்து முத்துநகர் விவசாயிகள் போராட்டம்.

மே 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை மாவட்டத்தின் முத்துநகர் பகுதியில் விவசாயிகளின் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின்சார திட்டங்களுக்காக வழங்கியமைக்கு எதிராக, தொழிலாளர் தினமான இன்று கருப்பாடை அணிந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முத்துநகர் சந்தி பகுதியில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்,
“எமது நிலம் எமக்கு வேண்டும்”| “விவசாயிகளுக்கு நீதி வேண்டும்”, “முத்துநகர் விவசாய காணிகளை மீளத் தா” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல தலைமுறைகளாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் தனியார் சூரிய மின்சார திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர். மேலும், தற்போதைய அனுர அரசாங்கம் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகள் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்…..
“எங்கள் பூர்வீக விவசாய நிலங்களில் இருந்து எங்களை வெளியேற்றியுள்ளனர். முந்தைய அரசுகளுக்கு எதிராக எங்களோடு நின்றவர்கள் இன்று அதே திட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்” என குற்றஞ்சாட்டினர்.

மேலும் அனுர அரசு அராஜகமாக எங்களை எங்கள் பூர்வீக காணியில் இருந்து வெளியேற்றியது எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், IMF அதிகாரிகளிடம் கூட தங்களது பிரச்சினைக்கு நீதி கோரி அழைப்பு விடுத்த அவர்கள், “முத்துநகர் மக்களின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்” எனக் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக கடந்த மாதங்களாகவும் முத்துநகர் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழ்.பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் சோதனை
அடுத்த செய்தி இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம் ரங்கா திசாநாயக்க தெரிவிப்பு!

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அலுவலகங்களுக்கு வரும் மக்களை கதிரையில் இருத்திவிட்டு அரச பணியாளர்கள் சேவை வழங்க வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

பிப்ரவரி 28, 2025
இலங்கை

மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு இலவச விசா!

ஜூலை 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாக விகாரை விகாரதிபதியை சந்தித்த ஜனாதிபதி

ஜனவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?