மொன்றியலின் புகழ்பெற்ற மவுண்ட் றோயல் (Mount Royal) பூங்காவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
நேற்று மாலை 5:20 மணியளவில் பூங்காவின் ‘அவென்யூ டு பார்க்’ (Avenue du Parc) மற்றும் ‘கோட்-டெஸ்-நைஜஸ்’ (Côte-des-Neiges) வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் பலருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் மேல் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அதே பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார், இரவு 7:30 மணியளவில் 58 வயதுடைய முதியவர் ஒருவரைக் கைது செய்தனர்.
அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
