Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு

ஏப்ரல் 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்களம், கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் தடுத்து வைத்துள்ளது.

இது தொடர்பில் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்த தீபச்செல்வன் , அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகள் எனது புத்தகத்தில் உள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சின் அனுமதி உடன் புத்தகங்கள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்நிலையில், கடந்த 17ஆம் திகதி கலாச்சார அமைச்சில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

அதில், எனது இலக்கிய எழுத்துச் செயற்பாடுகள் குறித்தும் குறித்த புத்தகங்களினுடைய முக்கியத்துவம் குறித்தும் எனது கருத்துக்களையும் தெரிவித்தேன்.

இலங்கை கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் என் சார்பில் சிங்கள தமிழ் எழுத்தாளர்களும் சட்டத்தரணியும் கலந்துக் கொண்டனர்.

எனினும் புத்தகங்கள் என்ன காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை இதன்போது குறிப்பிடவில்லை.

புத்தகங்கள் விடுவிக்கப்படும் என எதிர்பார்த்து சென்ற வேளையில் புத்தகங்கள் தொடர்பில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதற்காக சிங்கள படைப்பாளிகள் இளைஞர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் சில மூத்த சிங்கள எழுத்தாளர்களை வைத்து இந்த புத்தக தடுப்புக்கு நியாயத்தை கற்பிக்க முயல்கிறது.

அதில் ஒரு சிங்கள எழுத்தாளர் தனக்கு தமிழ் தெரியாது என்றும் என்னுடைய புத்தகங்களை வாசிக்கவில்லை என்றும் ஆனால் இவற்றில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு தரும் விடயங்கள் உள்ளன என்றும் கூறுவது எந்த வகையில் ஏற்படையது?

புத்தகத்தை வாசிக்காமல் இவ்வாறு கருத்து கூறுகிறார்கள். இதுவே இனவாதமும் பாரபட்சமும் ஆகும்.

இந்த நிலையில் உடனடியாக என்னுடைய புத்தகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இது என் மீதான அடிப்படை மனித உரிமை மீறல் என்பதினாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி மன்னாரில் இடம்பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி
அடுத்த செய்தி மன்னாரில் சிலோன் டெவலப்மென்ட் பிளான்டேஷன் (CDP) எம்பயர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம்

மே 22, 2026
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்!

செப்டம்பர் 14, 2025
இலங்கை

பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறை விரைவில்!

செப்டம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். தரம் பிரிக்கப்படாத கழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது

ஜூன் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?