Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அல்லைப்பிட்டியில் மனித என்பு சிதிலங்கள் மீட்பு

ஏப்ரல் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்புகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த என்பு சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மதுபான போத்தல்களும் , இளம்சிவப்பு (பிங் கலர்) நிற டீஷேர்ட் ஒன்றும் காணப்படுகிறது.

அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனது காணியினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பார்வையிட சென்ற நபர் என்பு சிதிலங்களை கண்ணுற்று , பொலிஸாரின் அவசர சேவை இலக்கத்திற்கு அறிவித்திருந்தார்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது அக்காணிக்குள் நின்ற மரம் ஒன்றில் தூக்கு போட்டமைக்கான அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , மரத்திற்கு அருகில் என்பு சிதிலங்கள் ஆங்காங்கே காணப்பட்டுள்ளன. உடலை மிருகங்கள் கடித்து குதறி இருக்கலாம் அதனால் என்புகள் சிதறி காணப்படுகிறது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேநேரம் , தூங்கிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மரத்தின் கிளை ஒன்றில் பிங் கலர் டீசேர்ட் ஒன்று காணப்படுகிறது. அது உயிரிழந்தவரின் டீசேர்ட்டாக இருக்கலாம் எனவும் , அதற்கு அருகில் உள்ள கிளை ஒன்றில் காணப்பட்ட பையில் இருந்து ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கையில் சுற்றப்பட்ட மதுபானத்துடன் மூன்று மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.

அதேவேளை அப்பகுதியில் கிழிந்த நிலையில் கறுப்பு நிற நீள காற்சட்டை ஒன்றும் காணப்படுகிறது. அதுவும் உயிரிழந்த நபரின் ஆடையாக இருக்கலாம் எனவும் , மிருகங்கள் உடலை இழுத்த வேளை காற்சட்டையும் கிழிந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் எவரும் காணாமல் போனதாக முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி , யாழ்ப்பாண தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு
அடுத்த செய்தி முல்லைத்தீவில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 12, 2025
இலங்கை

யாழில். இயந்திரங்கள் மூலமான கரைவலை தொழிலை தடுக்க கோரிக்கை

பிப்ரவரி 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு 55 ஆயிரம் நஷ்ட ஈடு

டிசம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?