களுத்துறையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. பழுதுபார்க்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், நாளை வெள்ளிக்கிழமை (7) காலை 08.00 மணி வரை நீர் விநியோகத் தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.