உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மாத்திரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மாத்திரமே பட்டாசு வெடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
