வனவிலங்குகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பயிர்ச்சேதங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விலங்குகள் கணக்கெடுப்பு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடத்தப்பட்டது. குறித்த கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 5.17 மில்லியன் குரங்குகளும் 1.74 மில்லியன் மந்திகளும் 4.24 மில்லியன் மயில்களும் 2.66 மில்லியன் மர அணில்களும் காணப்படுவதாக வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தால் வெளியிடப்பட விலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் கணக்கெடுப்புக்காக 2.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
