Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் தாலிக்கொடியை அறுத்த பெண் கைது

ஏப்ரல் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற பங்குனி திங்கள் உற்சவத்தின் போது பக்தர்கள் கூட்ட நெரிசலில் பெண்ணொருவரின் தாலிக்கொடி களவாடப்பட்டிருந்தது.

அது தொடர்பில் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சோதனை செய்து தாலிக்கொடி அறுத்த 58 வயதான பெண்ணை பொலிஸார் அடையாளம் கண்டு , அவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பெண் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆலயத்திற்கு காரில் வருகை தந்த நிலையில் அவரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அதன் போது அவருடன் காரில் வந்த ஏனைய இருவரையும் கைது செய்ததுடன் காரினையும் மீட்டு , பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் களவாடிய தாலிக்கொடியை தான் கிளிநொச்சி பகுதியில் உள்ள தாம் வழிபாட்டிற்கு செல்லும் ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் தாலிக்கொடியை மீட்டு வந்துள்ளனர் . கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி வவுனியா மாவட்ட ஒளிப்பட புகைப்பட சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்
அடுத்த செய்தி பாக்கு நீரிணை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட தமிழரசுக்கட்சி உத்தேசம்…..

மார்ச் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது

பிப்ரவரி 6, 2026
1
இலங்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு…

மார்ச் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?