Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடமாகாணத்திற்கு 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் அன்பளிப்பு

ஏப்ரல் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ‘கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக’ விஷன் கெயார் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் (Vision Charts), வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களினூடாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கிராம ஒளிவாழ்வுத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், மாகாணத்தில் உள்ள 55 பிரதேச மருத்துவமனைகள் மற்றும் 48 ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையங்கள் என மொத்தம் 103 மருத்துவ நிலையங்களுக்கும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாது நிலையங்கள் உள்ளிட்ட 709 பிரிவுகளுக்கும் இந்தக் கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதற்கமைவாகவே குறித்த 750 அட்டவணைகளும் விஷன் கெயார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாகப் பின்தங்கிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவான பயிற்சிகள் உரிய தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளதாக கண் சத்திர சிகிச்சை நிபுணர் எம்.மலரவன் இதன்போது குறிப்பிட்டார்.

விஷன் கெயார் நிறுவனம் தமது சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டத்தின் கீழ் இப்பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கண் சத்திர சிகிச்சை நிபுணர் எம்.மலரவன் மற்றும் விஷன் கெயார் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி வனத்துறையின் அரச வாகனம் முறைகேடாக பயன்பாடு
அடுத்த செய்தி யாழ்.பல்கலை அபிவிருத்தி தொடர்பில் துணைவேந்தருடன் ஆராய்ந்த இந்திய துணைத்தூதர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். சொகுசு வீட்டில் தவறான தொழில்

ஜனவரி 10, 2026
இலங்கை

பிரதமர் மற்றும் இத்தாலியின் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!

செப்டம்பர் 5, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா..

மார்ச் 20, 2025
இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு- தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?