Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ஆன்மாக்களின் தியாகங்களும் மகத்தானது – பா.உ. செல்வம் அடைக்கலநாதன்

ஏப்ரல் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த அந்த நாளைப் போலவே எம் மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் நீங்கி, வடக்கு கிழக்கு எமது தாயக மண் விடுதலை பெற வேண்டும். உயிர்த்த ஞாயிறு அன்று எமது கத்தோலிக்க மக்களும், ஏனைய மதங்களை சார்ந்த மக்களும் படுகொலை செய்யப்பட்ட அந்த கருப்பு வரலாற்றை எம்மால் ஒருபோதும் மறக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஈஸ்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புனிதமான உயிர்த்த ஞாயிறு நன்னாளிலே, எங்களுடைய இனத்தின் விடுதலைக்காகவும், மக்கள் படுகின்ற துயரங்களில் இருந்து அவர்கள் மீட்சி பெறவும் பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடைய மக்கள் செய்த தியாகங்கள், போராளிகள் செய்த ஈகங்கள் அத்தனையும் இந்த உயிர்த்த ஞாயிறு நன்னாளிலே நினைவுகூரப்பட வேண்டும்.

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த அந்த நாளைப் போலவே, எம் மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் நீங்கி, வடக்கு கிழக்கு எமது தாயக மண் விடுதலை பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

எம் மக்களின் அனைத்து துன்பங்களும் இந்த நாளிலே இறைவனின் ஆசியோடு முடிவுக்கு வர வேண்டும் என்று வேண்டி, உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிக்கான கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று எமது கத்தோலிக்க மக்களும், ஏனைய மதங்களை சார்ந்த மக்களும் படுகொலை செய்யப்பட்ட அந்த கருப்பு வரலாற்றை எம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. கடந்த அரசாங்கமாக இருக்கட்டும் , தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கமாகட்டும், இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாகவும், சம்பந்தப்பட்ட வர்களைக் கைது செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தனர்.

தற்போதைய அரசை பொறுத்தவரையில், விசாரணைகளை மேற்கொள்கின்ற நிலை காணப்பட்டாலும், இதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்த குண்டு தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ஆன்மாக்களின் தியாகம் மகத்தானது. உயிர்த்த ஞாயிறு திருப்பலியில் தங்களை அர்ப்பணித்து, தங்கள் குடும்ப கஷ்டங்களை இயேசு பிரானிடம் முறையிட வந்த அந்த அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி கண்டிக்கத்தக்கது.

விசாரணை என்ற பெயரில் உண்மைகளை மூடி மறைக்கின்ற செயல்பாடுகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. புதிய அரசு இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது போலத் தெரிந்தாலும், இன்னும் அவை முழுமை பெறவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆகவே, உயிரிழந்த அந்த ஆன்மாக்களுக்காக இந்த அரசாங்கம் ஒரு நியாயமான தீர்ப்பை பெற்றுத்தர வேண்டும். உயிர்த்த ஞாயிறு என்பது மக்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகின்ற ஒரு தினமாக இருந்தாலும், வரலாற்று ரீதியாக எமது மக்கள் செய்த உயிர் தியாகங்களையும் நாம் நினைவு கூர வேண்டும்.

இந்த உயிர்த்த ஞாயிறு தினமானது, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப் படுகின்ற ஒரு நீதியான ஆண்டாக அமைய வேண்டும்.

தேவாலயங்களில் எமது மக்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகத் தாழ்மையுடனும், உறுதியுடனும் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றோம்.என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி புது வாழ்வின் விழாவாக இந்த உயிர்ப்பு விழா அமைய வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ராஜபக்சக்களின் ஆட்சி மீது வெறுப்பு – சரத் பொன்சேகா தெரிவிப்பு!

நவம்பர் 5, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் .மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிவ பூஜையில் கரடி புகுந்த சம்பவம்….

மார்ச் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச நிதியில் லண்டன் சென்றதாக குற்றச்சாட்டு – ரணில் விசேட அறிக்கை

மார்ச் 18, 2025
இலங்கை

கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?