வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதியினை சீர் செய்யும் பணியினை இன்றையதினம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 24 மில்லியன் ரூபாய் செலவில் பாதையை சீர் செய்வதத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருத்தனர்.