நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்து ஒன்று எதிர்வரும் ஆறாம் திகதியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து சாலை மேலாளர் எம்.பாலித பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை சிறப்பாக கொண்டு செல்லும் நோக்கில் புதிய பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
குறித்த பேருந்து இரத்மலானை பணிமனையிலிருந்து இருந்த பழைய பேருந்து என்பதுடன் இதனை சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளதாக எம். பாலித பண்டார தெரிவித்துள்ளார்.
இப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் சீருடை வழங்கப்படவுள்ளதுடன், ஹட்டன் பணிமனையில் மட்டுமே இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
