நாட்டில் இன்றையதினமும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மாலை வேளையில் சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, வடமத்திய மாற்று கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய,ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், வுவுனியா ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலையில் பனி நிறைந்து காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
