2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்த்த சாதனை மாணவனை கௌரவிக்கும் விசேட நிகழ்வு இடம்பெற்றது.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரபல வர்த்தகரும், முதலீட்டாளருமான ஸ்ரீகுகன் அம்மாணவனின் அபாரமான கல்விச் சாதனையை பாராட்டி அவருக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது சொந்த மண்ணின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கோடு, எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக சாதனை படைக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தொழிலதிபர் ஸ்ரீகுகன் செயல்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (2) மாணவன் தெ.திருக்குமரனின் வீட்டுக்குச் சென்ற தொழில திபரின் பணியாளர்கள் குறித்த மாணவன் மற்றும் பெற்றோரை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு,அவர் அனுப்பி வைத்த தங்க மோதிரத்தையும் பரிசாக அனுவித்துள்ளனர்
தொழிலதிபர் மேற்கொண்ட இந்தச் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
