மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மே மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ் வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 293 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 178 ரூபாயாக பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.