யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27 ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும் போது கடற்தொழிலுக்கு சென்ற வேளை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.
