Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பங்களாதேஷ் காவலில் இருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக பங்களாதேஷ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

இதற்கு அமைவாக இந்த மீனவர்கள் குழு நாளை காலை நாடு திரும்புவார்கள் என்று இலங்கை கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மீனவர் குழு 2025 ஜூலை 16 அன்று, ‘Sudu Duwa 4‘ என்ற பல நாள் மீன்பிடிப் படகில் பயணம் மேற்கொண்டது.

பின்னர் கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் பங்களாதேஷ் கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் மத்திய சிறையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, வெளிவிவாகர அமைச்சு மற்றும் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான இராஜதந்திர தலையீடுகளின் பின்னணியில் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது.

முந்தைய செய்தி டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிப்பு
அடுத்த செய்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வெல்லவாய பகுதியில் மரத்துடன் வேன் மோதி விபத்து!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாண ஆளுநரை சந்தித்த சுவிஸ் தூதுவர்

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?