கிளிநொச்சி – பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் அதே திசையில் பயணித்த டிப்பர் வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி உயிரிழந்துள்ளார்.
உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதியொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
