Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். கோட்டை மற்றும் யாழ். பழைய கச்சேரியை மரபுசார் சுற்றுலா தளங்களாக விருத்தி செய்ய நடவடிக்கை….

மே 27, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ் கோட்டை மற்றும் யாழ் பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்வது தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் யாழ் மாவட்ட செயலாளர் கலந்துரையாடி உள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உற்கட்டுமாணம் மற்றும் சுற்றுலா துறைகளை விருத்தி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத்தரவுகளை பெற்றிருந்தது.

இதன் இறுதி அங்கமாக துறைசார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்து திட்டங்களை நிச்சயப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர்,

அந்த வகையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் திரு. அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு யாழ்பாண மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அதனைத் தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில்,

யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், மாவட்டத்திலுள்ள குளங்களை புணரமைக்கும் செயற்றிட்டம் , யாழ் நகர திண்மக்கழிவு முகாமைத்துவம், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் அபிவிருத்தி செய்தல், யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்தளம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவம் ஆகிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இச் செயற்றிட்டங்கள் தொடர்பிலான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் உலக வங்கி குழுவினர் கோரியிருந்தனர்.

இக் கலந்துரையாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்திற்கு உலக வங்கிக் குழுவினரை மாவட்ட செயலாளர் அழைத்துச் சென்று புணரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக விளக்கமளித்தார்.

முந்தைய செய்தி கொழும்பு கோட்டையில் இன்று கடும் வாகன நெரிசல்…
அடுத்த செய்தி நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

பிப்ரவரி 13, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இத்தாலியில் எரிமலை வெடிப்பு

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

ஜூன் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கவிஞர் தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க கோரி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?