இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் லொறியோடு தனியார் பேருந்தொன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து மார்க்கபுரம், ராயவரம் அருகில் இடம்பெற்றதோடு, தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் தீப்பற்றி எரிந்துள்ளது.
மேலும் இதில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
