Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது

மார்ச் 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்திற்கான புதிய நிர்வாக தெரிவு குறித்த தொழிற் சங்கத்தின் ஸ்தாபகரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் யாழில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளிகளில் ஒருவனாக இருந்தவன்.
போராட்டம் பலவீனப்பட்டு திசைதிரும்பிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை கொண்டுவரப்பட்டது.

போராட்டம் பலவீனமடைந்து போன நிலையில் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை முறைமை ஊடாகத்தான் நாம் எமது நகர்வுகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அன்றிலிருந்து இன்றுவரை நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன்.

ஆனால் எனது அந்தக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு செல்லப்படாத நிலை காணப்பட்டது.

மாறாக வன்முறையுடனான கருத்துக்களே வலுவாக முன்கொண்டு செல்லப்பட்டுருந்தது.

ஆனால் நான் அன்று சொன்ன கருத்துக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகின்றது.

இதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் உருவாகியிருந்திருக்காது என்பதுதான் எனது வலுவான கருத்து.

இதேநேரம் நான் முன்வைத்திருந்த அரசியல் இலக்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும்.

இதுதான் சமஸ்டியும் கூட. இந்த கருத்துக்கு தென்னிலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது. இதை அடைவதே எமது நோக்கமும் ஆகும்.

வரலாற்று கற்பிதங்கள் மூலம் நான் கண்ட அனுவங்களின் ஊடாகவே அரசியல் கருத்துக்களை நான் திரும்பத் திரும்ப கூறி வருகின்றேன்.

ஆனால் இதை சிலர் எனது குறைபாடாக கருதலாம். ஆனால் அவ்வாறு கூறுவது, ஜதார்த்தமான நடைமுறைச் சாத்தியமான விடையங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிந்து செயலுருவம் பெறவேண்டும் என்பதற்காகவே என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மகிந்தவின் சட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிராக செற்படுத்தும் இரா.சாணக்கியன்
அடுத்த செய்தி பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் அரசு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ள சின்னராசா லோகேஸ்வரன்

டிசம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் காவலரண்களை அமைக்குமாறு கோரிக்கை

அக்டோபர் 11, 2025
இலங்கை

நவீன் சூரியாரச்சியின் மறைவுக்கு கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தீபாவளியன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?