Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மகிந்தவின் சட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிராக செற்படுத்தும் இரா.சாணக்கியன்

மார்ச் 18, 2026
படிக்க 5 நிமிடங்கள்
SHARE

மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உண்மைகளை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது போன்ற அதே சட்டத்தை அந்த கட்சி அரசியலில் இருந்து வந்த இரா.சாணக்கியன் இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு எதிராக கொண்டுவந்து வழக்கு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார். எனவே நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற இவருக்கு எதிர்வரும் தேர்தலில் இளைஞர் யுவதிகள் பாடம் புகட்டவேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்று ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன ஊடக சுதந்திரத்துக்காக தமிழ்தேசியத்துக்காக குரல் கொடுக்கும், ஒருவர் நாடாளுமன்றத்தில் ஊடகங்களுக்கு மட்டும் குரல் கொடுப்பார். அந்த குரல்களை கொடுத்த பின்னர் அவர் சம்மந்தப்பட்ட உண்மைகளை ஊடகங்கள் வெளிக் கொண்டுவந்தால் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறையை பாவிப்பார்.

அவ்வாறான அவர் நிகழ் நிலை காப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதற்கு எதிர்த்து குரல்கொடுத்தார், அவ்வாறு குரல் கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் தான் தமிழ் மக்களுக்காக கஷ்டப்படுவதாகவும் அவர்களின் உரிமைக ளுக்காக போராடுவதவாக காட்டிக் கொள்வார்.

கடந்த காலத்தில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிராக குரல்கொடுத்து ஊடக சுதந்திரம் இருக்கின்றது ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரமுடியாது ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என குரல் கொடுத்துவிட்டு இன்று அதே நிகழ் நிலை காப்பு சட்டத்தை பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மற்றும் 50 இளைஞர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஊடக சுதந்திரத்தை கழுத்தில் பிடித்து நசுக்க முயற்சி செய்கின்றார்.

எனவே இதில் பார்க்க வேண்டிய விடையம் என்னவென்றால் தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று கடந்த காலத்தில் மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருடைய உண்மை தனன்மையை வெளிக் கொண்டுவந்த பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் கடத்தபட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அதே சட்டத்தை தான் இன்று இரா.சாணக்கியன் பயன்படுத்துகின்றார்.

இதற்கு காரணம் கடந்த காலத்தில் ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து வந்த இவர் அந்த கட்சியின் ஊடாகத்தான் அரசியலில் நுழைந்தவர் ஆதலால் மகிந்தவுடன் இருந்த இவருக்கு தெரியும் உண்மை தன்மைகளை வெளிக் கொண்டுவந்தால் அவர்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ எவ்வாறு ஈடுபட்டார்

இவ்வாறான இவர் நிகழ் நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்புகளை தெரிவித்து கையொழுத்து வேட்டைகளை செய்து ஊடக சுதந்திரத்துக்காகவும் தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கின்ற இவர் உண்மையாகவே தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதில்லை இவருடைய நாடாளுமன்ற கதிரைகளை தக்க வைப்பதற்காக இவர் குரல் கொடுக்கின்றார். எனவே அவரின் உண்மை தன்மைகளை வெளிக் கொண்டுவந்த ஊடகங்களையும் இளைஞர்களுக்கும் அச்சுறுத்துவதை கவன்மையாக கண்டிக்கதக்கது.

சட்டமா அதிபர் மற்றும் சட்டமா திணைக்களத்திடம் தயவாக வேண்டிக் கொள்வது இந்த இளைஞர்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகளை கூடுதல் கவனம் செலுத்தி இதனை துரித கதியில் முடிவுக்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் அதேவேளை ஊடக சுதந்திரத்துக்காக கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கோருகின்றோம்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்காவினால் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது இதில் குளத்தில் மைதானம் அமைத்தது மற்றும் அரச அங்கீகாரம் இல்லாத பதியப்படாத இடங்களுக்கு நிதிகளை வழங்கினார்.

இதனை நான் ஊடகங்கள் ஊடாக உண்மை தொடர்பாக சுட்டிக்காட்டி வெளிக் கொண்டுவந்து இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்ததன் காரணமாக என்னை பழிவாங்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டார்.

நான் களுவங்கேணியில் குத்தகை அடிப்படையில் சட்டரீதியாக பெற்று இயங்கிவந்த மீனவர்களுக்கு சொந்தமான மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என அபிவிருத்தி குழு கூட்டங்களில் உண்மைக்கு புறம்பாக அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தைநான் சட்டவிரோதமாக இயக்கிவருவதாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளருடன் இனைந்து மண்ணெண்ணை விநியோகத்தை கடந்த வருடம் யூலை 21ம் திகதி துண்டித்தார்.

இது அவருக்கு எதிராக உண்மையை வெளிக் கொண்டுவந்து குரல் கொடுத்து முறைப்பாட்டடை செய்ததன் காரணமாக எனது குரல் நசுக்கப்பபட்டு எனது தொழிலும் முடக்கப்பட்டுள்ளது னவே இவ்வாறான செயற்பாட்டை இரா. சாணக்கியன் நிறுத்தி கொள்ளவேண்டும்

அதேவேளை இன்று களுவங்கேணியில் இருக்கின்ற எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனர். இந்த ஆதாரம் அற்ற இந்த பொய்குற்றச்சாட்டை மட்டு மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எடுத்து தவறான முடிவினால் இந்த மீனவர்கள் பாதிக்கபட்டுள்ளனர் எனவே இதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்

கடந்த காலத்தில் களுவங்கேணி மீனவர்கள் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தங்களுக்கு வேண்டாம் என வர்த்தமாணி ஊடாக வெளியிடப்பட்டு துறைமுக அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டு இயங்கா நிலையில் இருந்தது .

இதனை நான் இரத்து செய்து மீண்டும் மீனவர்களுக்கு பெற்றுக் கொடுத்து அந்தபகுதியில் இருக்கும் 3 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி மீனவர் சங்கத்துக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வாடகை கொடுத்து நடாத்தி வந்தேன் என்னை பழிவாங்கும் முகமாக மண்ணெண்ணை விநியோகத்தை துண்டித்துள்ளனர்

வீட்டு சின்னத்தில் எருமை மாட்டை நிறுத்தி அதற்கு வாக்கு போட சொன்னால் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கண்ணை மூடி வாக்களிப்பார்கள் எருமை மாடு பின்னர் என்ன செய்யும் என்பதை தமிழ் மக்கள் உணரவேண்டும்.

எனவே அன்பான தமிழ் மக்களே வடகிழக்கில் வாழும் இளைஞர்;. யுவதிகளே தேர்தல்; காலங்களில் வாக்குகேட்டு வருபவர்கள் உண்மையாக தமிழ் தேசியம் பேசுகின்றவர்களா? தமிழ் மக்கள் மீதும் தமிழ் மண் மீதும் பற்றுக் கொண்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும் என்பதுடன் எதிர்வரும் தேர்தலில் இவ்வாறு தமிழ் இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற இவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

முந்தைய செய்தி ஈரான் தாக்கப்படாமல் இருந்திருந்தால் மூன்றாம் உலகப் போர் வெடித்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை
அடுத்த செய்தி நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குருக்கள் மடம் மனிதப் புதை குழி அகழ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு!

நவம்பர் 12, 2025
இலங்கை

முன்னாள் அமைச்சரின் மகளின் சொத்துக்களை முடக்குவோம் என பொலிசார் எச்சரிப்பு!

ஜூலை 24, 2025
இலங்கை

யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்

டிசம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?