வவுனியா நெற் சந்தைப்படுத்தல் சபையினால் இன்றையதினம் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என விவிசாயிகள் கவலை தெரிவித்தனர்.
அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் வவுனியா மாவட்டத்தில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடம் இருந்து இன்றையதினம் நெல்லினை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நெல் கொள்வனவிற்கான நிதி தமக்கு கிடைக்காமையினாலேயே நெற்கொள்வனவினை முன்னெடுக்கவில்லை என்றும், திங்கள் கிழமைக்கு பின்னரே நெற் கொள்வனவினை மேற்கொள்ள முடியும் என நெல் சந்தைப்படுத்தும் சபையினர் தமக்கு தெரிவித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.