இலங்கை வியமானப்படைக்கு (SLAF) உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் இரண்டு, அமெரிக்கா அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் மைல்கல்லாக விளங்குகின்றது.
அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட இவ்விரண்டு எரிபொருள் நிரப்பும் வாகனங்ககளும் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், அமெரிக்க அரசாங்கத்திற்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் இலங்கை விமானப்படை அறிக்கையொன்றினுடாக நன்றி தெரிவித்துள்ளது.


