நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் ஒரே நிலவழிப் பாதையான ஹைவே 11 மற்றும் 17-ஐ “தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவக் கட்டமைப்பாக” (Dual-use National Infrastructure) அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னிக்கு இக்கோரிக்கையை வடக்கு ஒன்ராறியோ நகராட்சிகளின் சங்கம் ஆனது, அவசரக் கடிதம் ஒன்றின் மூலமாக அனுப்பியுள்ளது.
வழக்கமான நெடுஞ்சாலை மேம்பாட்டு நிதியைப் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்த்துவிட்டு,, பிரதமர் கார்னி அண்மையில் அறிவித்த 82 பில்லியன் டொலர் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்திலிருந்து, நிதியைப் பெறுவதே இக்கோரிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் சாலைகளை இராணுவப் பயன்பாட்டிற்கும் உரியதாக அறிவிப்பதன் மூ லம், நேட்டோ (NATO) நாடுகளுக்கான பாதுகாப்பு இலக்குகளை எட்ட முடியும் என, வடக்கு ஒன்ராறியோ நகராட்சிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிதைந்து கிடக்கும் வடக்கு ஒன்ராறியோ சாலைகளைப் புனரமைக்கவும் முடியும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
