மொன்றியல் மற்றும் கியூபெக் சிட்டி ஆகிய நகரங்களில் நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கிப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கியூபெக் மாகாணத்தின் புதிய சட்டங்கள் மற்றும் உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய (Migrant Women) பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகப் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
மொன்றியல் நகரில் ‘Women of Diverse Origins’ என்ற அமைப்பு நடத்திய இந்த 25-வது ஆண்டுப் பேரணியில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மத அடையாளச் சின்னங்களைத் தடை செய்யும் கியூபெக் மாகாண அரசின் சட்டத்தால் (Bill 21), ஹிஜாப் அணியும் பெண்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாகவும், இது அவர்களைப் பொருளாதார ரீதியாகப் பிறரைச் சார்ந்து இருக்க வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கியூபெக் மாகாணத்தில் தற்காலிக வேலை அனுமதியில் இருக்கும் பெண்கள் பல இடங்களில் பாலியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டப்படுவதாகவும், அவர்கள் நிரந்தரமாகக் குடியேறுவதில் உள்ள சிக்கல்கள், அவர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்குவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
