Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்

மார்ச் 6, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான மற்றும் சட்டவிரேதமாக பொது இடங்கள் மற்றும் வீதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள மதங்களுடைய சிலைகள் அகற்ற கோரி தனிநபர் பிரேரணைகள் நேற்று வியாழக்கிழமை (5) கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாநரசபையின் 8 வது சபையின் 11வது பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கிய நாதன் தலமையில் நேற்று வியாழக்கிழமை (05) சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரவுள்ள அரசை பாதுகாக்கும் சட்டத்துக்கு ஏதிராக பந்து சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு உறுப்பினரான ஜெயா என்றழைக்கப்படும் சீனித்தம்பி ஜெயச்சந்திரகுமார, தனிநபர் பிரேரணையை கொண்டுவந்தார்

இந்த பிரேரணையை சபையின் முன்வைத்த அவர் 1979 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் 48 ம் இலக்க பயங்கரவாத சட்டம் தற்காலிகமாக கொண்டு வந்து அது 1982ம் ஆண்டு நிரந்தர சட்டமாக மாறியது இந்த சட்டம் 1989 வரை மாணவர் இயக்கங்களுக்கும் மக்கள் முன்னணிக்கும் எதிராக ஒரு சட்டமாக இருந்தது.

1983 ம் ஆண்டு தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு போர் வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் 2019 ம் ஆண்டு உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் 2022 ம் ஆண்டு பிற்பகுதியில் அரக்கல போராட்ட காரர்களுக்கும் எதிராக ஒரு முழுமையான ஒரு சட்டமாக 46 ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.

இருந்தபோதும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்; ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கா இந்த சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறினார் ஆனால் இன்று அவரால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தைதான் நிறுத்த முடிந்துள்ளது.இவ்வாறு பல நல்ல காரியங்களை செய்தாலும் இதனை செய்ய வில்லை. எனவே இந்த சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என கோருகின்றேன்.

அதேவேளை 1979ம் இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் போது அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் தலைமையிலான 12 பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்; ஆனா இவர்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை ஏதிர்த்து வாதாடதவும் இல்லை அன்று இதனை இவர்கள் எதிர்திருந்தால் சர்வதேசம் மற்றும் இந்தியா ஆதரவு தந்திருக்கும். ஆனால் இவர்கள் மௌனித்து ஆதரவு வழங்கியுள்ளனர்.

இன்று 46 வருடத்துக்கு பின்னர் நாங்கள் எதிர்க்க வேண்டியதாக இருக்கின்றது எனவே இந்த சட்டத்தை எதிர்த்து வரவிடாமல் செய்ய அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரியதையடுத்து தேசிய மக்கள் சகத்தி உறுப்பினர்கள் நடுநிலையக இருப்பதாக அறிவித்ததுடன் ஏனைய உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு அதரவு தெரிவித்து நிறைவேற்றினர்.

அதேவேளை தமிழரசு கட்சி உறுப்பினர் கருணாநிதி ஜனகன் மாநகர சபை எல்லைக்குள் உள்ள பொது இடங்கள் மற்றும் வீதிகளில் மதங்களுடைடய சிலைகளை சட்டவிரோதமாக வைத்து வருவதால் பொதுமக்கள் வீதியால் பிரயாணிக்க முடியாது சூழல் ஏற்பட்டுவருவதுடன் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுவருகின்றது எனவே சட்டவிரோதமாக பொது இடங்கள் வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் மதங்களுடைய சிலைகளை சட்டரீதியாக அகற்றுமாறு கோரி பிரேரணை ஒன்றை கொண்டுவந்தார் அதனை ஏகோபித்து உறுப்பினர்கள் ஆதரவ தெரிவித்து அது நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் கோரிக்கை ஒனடறை முன்வைத்து உரையாற்றுகையில் வளைகுடா யுத்தத்தையடுத்து எரிவாயுக்கான தட்டுபாடு எமது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ளதுடன் எமது தாய்மார்கள் எரிவாயு (காஸ்) இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர் இதற்கு காரணம் இந்த மாவட்டத்துக்கு காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு முகவர்கள் மட்டும் தான் இருப்பதுடன் அவர்கள் தமது சமூகம் சார்ந்து மட்டும் இந்த எரிவாயுக்களை விநி யோகிக்கின்றனர்.

எனவே இவ்வாறான செயற்பாடு கண்டிக்கதக்கதுடன் இந்த எரிவாயுவான (காஸ்) விற்பனை முகவர்களை தமிழ் பகுதிகளில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என காஸ் கம்பனியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை சபை ஊடாக அந்த கம்பனிக்கு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்து சபை அமர்வுகள் பிற்பகல் 1.45 மணிக்கு நிறைவு பெற்றது.

முந்தைய செய்தி மத்தியகிழக்கில் நிலவும் போர் தொடர்பில் ஆளும் லிபரல் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு
அடுத்த செய்தி காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை இன்று ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவு கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்

நவம்பர் 17, 2025
இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் தாமதம்!

அக்டோபர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

பிப்ரவரி 7, 2026
இலங்கை

நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

ஜனவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?